மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு
மாநிலங்களவை நாளை காலை 9 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய நாயுடு அறிவித்துள்ளார்.


புது தில்லி: மாநிலங்களவை நாளை காலை 9 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய நாயுடு அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டநிலையில், மாநிலங்களவை மற்றும் மக்களவை நேற்று காலை கூடியதும், மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து, மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் இன்று காலை வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை கூடிய மக்களவை நாளை(பிப்.3) காலை 9 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடு அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...