ரூ. 1.91 லட்சம் கோடி திருப்பி ஒப்படைப்பு: வருமான வரித்துறை
இந்தியாவில் 2020-2021 நிதியாண்டில் இதுவரை வருமான வரி செலுத்திய 1.87 கோடி பேருக்கு ரூ. 1.91 லட்சம் கோடி திருப்பி அளித்துள்ளதாக வருமான வரித்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.


இந்தியாவில் 2020-2021 நிதியாண்டில் இதுவரை வருமான வரி செலுத்திய 1.87 கோடி பேருக்கு ரூ. 1.91 லட்சம் கோடி திருப்பி அளித்துள்ளதாக வருமான வரித்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையில்,
இந்தியா முழுவதும் ஏப்ரல் 1, 2020 முதல் பிப்ரவரி 10, 2021 வரையிலான வருமான வரி செலுத்துவோருக்கான திருப்பி வழங்கல் தொகை ரூ. 1,91,015 கோடி தொகையை 1.87 கோடி கணக்குகளுக்கு மத்திய நேரடி வரி வாரியம் திருப்பி வழங்கியுள்ளது.
அதில், 1,84,45,638 தனிநபர் கணக்குகளுக்கு ரூ. 67,334 கோடியும் 2,14,935 கார்ப்ரேட் நிறுவன கணக்குகளுக்கு ரூ. 1,23,680 கோடியும் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...