ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மும்பையில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்படுமா? மேயர் விளக்கம்

மீண்டும் பொதுமுடக்கம் அறிவிப்பது மக்கள் கையில் தான் உள்ளது என்று மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :16 பிப்ரவரி 2021, 9:49 am

ANI

மீண்டும் பொதுமுடக்கம் அறிவிப்பது மக்கள் கையில் தான் உள்ளது என்று மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நாடு முழுவதும் பரவிய கரோனா தொற்றால், மும்பை நகரில் அதிகபட்ச மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இருப்பினும் கடந்த சில நாள்களாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட கரோனா தொற்று, தற்போது மும்பையில் மீண்டும் அதிகரித்து வருகின்றது.

இதுகுறித்து மும்பை மாநகராட்சி மேயர் கிஷோரி பெட்னேகர் கூறுகையில்,

மும்பை ரயில்களில் பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணிந்து பயணிப்பதில்லை. மீண்டும் பொதுமுடக்கம் போடாமல் இருப்பது மக்கள் கையில் தான் உள்ளது. பொதுமுடக்கம் அமல்படுத்தாமல் இருக்க வேண்டுமானால் மக்கள் முன்னெச்சரிக்கை நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கூறினார்.

நேற்று ஒரே நாளில் மும்பை நகரில் மட்டும் 493 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.