தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

டெஸ்டில் 400 விக்கெட்களை வீழ்த்தி அஸ்வின் சாதனை!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை படைத்துள்ளார்.

News image
ரவிச்சந்திரன் அஸ்வின்
Updated On :25 பிப்ரவரி 2021, 4:12 pm

DIN

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை படைத்துள்ளார்.

இலங்கை வீரர் முத்தையா முரளிதரனுக்கு அடுத்தபடியாக குறைவான போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டம் பகலிரவு டெஸ்ட் ஆட்டமாக நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாம் நாளான இன்று பேட்டிங் செய்த இந்திய அணி 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் வரிசையாக ஆட்டமிழந்து வருகின்றனர்.

இதில், 23வது ஓவர் மூன்றாவது பந்தை வீசிய அஸ்வின், இங்கிலாந்து வீரர் ஆர்சரை எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழக்க செய்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400வது விக்கெட்டை பதிவு செய்தார்.

குறைந்த போட்டிகளில் 400 விக்கேட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் முரளிதரனுக்கு(72 போட்டிகள்) அடுத்தபடியாக அஸ்வின் 77 போட்டிகளில் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இதே ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸின் போது சர்வதேச போட்டிகளில் 600 விக்கெட்டுகளை கடந்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.