கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இந்திய-பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு: இந்திய ராணுவம்

இந்தியா - பாகிஸ்தான் எல்லை பிரச்னைகள் தொடர்பாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

News image

இந்திய-பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு

Updated On :25 பிப்ரவரி 2021, 10:18 am

இந்திய - பாகிஸ்தான் எல்லை பிரச்னைகள் தொடர்பாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

எல்லைகளில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து போர்நிறுத்த விதிமுறைகளை மீறி வருகின்றனர். இதனால் ராணுவ வீரர்களும், பொதுமக்களும் பலியாகின்றனர்.

இதனை தடுக்கும் வகையில், இரு நாட்டை சேர்ந்த ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் தரப்பில் பிப்.22 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அதில், எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் பிற பிரச்னைகள் குறிந்து இரு தரப்பினரும் மதிப்பாய்வு செய்து, வெளிப்படையாக கலந்துரையாடினர்.

எல்லைகளில் இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதியை உறுதி செய்ய இரு நாட்டு அதிகாரிகளும் ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும், பிப்ரவரி 24 நள்ளிரவு முதல் அனைத்து ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வுகளை பின்பற்றுவதை உறுதி செய்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.