நாட்டில் 1.37 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி: மத்திய அரசு
நாட்டில் இதுவரை 1.37 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.


நாட்டில் இதுவரை 1.37 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இதுபற்றி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
42வது நாளான வியாழக்கிழமை மட்டும் மாலை 6 மணி வரை 2,84,297 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 1,37,56,940 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் சுகாதாரப் பணியாளர்கள் 66,37,049 பேருக்கு முதல் முறையாகவும், 22,04,083 பேருக்கு இரண்டாம் முறையும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், முன்களப் பணியாளர்கள் 49,15,808 பேருக்கு முதல் முறையாக போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த ஜனவரி 16 முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 14,44,173 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...