

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று(செவ்வாய்க்கிழமை) இலங்கைக்கு அரசு முறை பயணமாக வந்துள்ளதாக கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில்,மூன்று நாள்கள் அரசு முறை பயணமாக இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சென்றுள்ளார்.
இதுகுறித்து கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்தியில்,
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்பு வந்தடைந்தார். இந்த பயணத்தின் போது இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச, பிரதமர் மகிந்த ராஜபட்ச மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.