இலங்கை அதிபருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று(புதன்கிழமை) இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சவை சந்தித்தார்.


மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று(புதன்கிழமை) இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சவை சந்தித்தார்.
இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில்,மூன்று நாள்கள் அரசு முறை பயணமாக இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சென்றுள்ளார்.
இந்த பயணத்தின் போது இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச, பிரதமர் மகிந்த ராஜபட்ச மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்திக்க உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இலங்கை அதிபரை நேரில் சந்தித்து கலந்துரையாடும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்.
இந்நிலையில், இன்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சவை நேரில் சந்தித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...