சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மத்திய அரசு - விவசாயிகள் இடையே 10-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது

மத்திய அரசு - விவசாயிகள் இடையே 10ஆம் கட்ட பேச்சுவார்த்தை தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தொடங்கியது.

News image
மத்திய அரசு - விவசாயிகள் இடையே 10-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது
Updated On :20 ஜனவரி 2021, 9:29 am

ANI

மத்திய அரசு - விவசாயிகள் இடையே 10ஆம் கட்ட பேச்சுவார்த்தை தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தொடங்கியது.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 57-வது நாளாக தில்லி எல்லைகளில் போராடி வருகின்றனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை கைவிடுவது தொடர்பாக  மத்திய அரசு, விவசாய சங்கங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

மத்திய அரசுடன் 9 கட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று தில்லியில் டிரேக்டர் பேரணி நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று(ஜன.20) 10ஆம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல் மற்றும் விவசாய சங்கத் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.