பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

மாநிலங்களவை பிப்.1 வரை ஒத்திவைப்பு

மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையும் திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image
மாநிலங்களவை பிப்.1 வரை ஒத்திவைப்பு
Updated On :29 ஜனவரி 2021, 10:48 am

DIN

மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையும் திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தில், 2020 21-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

கரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி குறித்த புள்ளி விவரத் தகவல்கள் அடங்கிய ஆய்வறிக்கையை தாக்கல் செய்யும்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து எம்.பி.க்கள் கூச்சல் எழுப்பியதால் பிப்ரவரி 1-ம் தேதி காலை 11 மணிவரை மக்களவை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மாநிலங்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பின் மாநிலங்களவையும் பிப்.1 வரை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.