தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பேரிடரால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்களுக்கு ரூ. 1,751 கோடி ஒதுக்கீடு

பேரிடரால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்களுக்கு ரூ. 1,751.05 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயர்நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

News image
பேரிடரால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்களுக்கு ரூ. 1,751 கோடி ஒதுக்கீடு
Updated On :29 ஜனவரி 2021, 11:37 am

ANI

பேரிடரால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்களுக்கு ரூ. 1,751.05 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயர்நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டில் கடந்த தென்மேற்கு பருவமழை காலத்தில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை படையின் நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில்,

தேசிய பேரிடர் மேலாண்மை படையின் நிதியிலிருந்து, 2020ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை காலத்தில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்களுக்கு ரூ. 1,751.05 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு உயர்நிலைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

அதில் அசாம் மாநிலத்திற்கு ரூ. 437.15 கோடி, அருணாச்சலப் பிரதேசத்திற்கு ரூ.75.86 கோடி, ஒடிசாவிற்கு ரூ. 320.94 கோடி, தெலங்கானாவிற்கு ரூ. 245.96 கோடி மற்றும் உத்தரப் பிரதேசத்திற்கு ரூ. 386.06 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.