திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதிக்கு இரண்டு வயது பெண் குழந்தை உள்ளது. குழந்தையை வீட்டின் திண்ணையில் விளையாட சொல்லி விட்டு, தாய் கடைக்கு சென்று வந்துள்ளார். அவர் திரும்பிய நேரத்தில் குழந்தை திண்ணையில் இல்லை. பின்னர் அந்த குழந்தை, பிரகாஷ் என்பவர் தன்னை முத்தமிட்டதாக கூறிய விஷயம் அச்சத்தை ஏற்படுத்தியதால், குழந்தையின் உடல் மற்றும் உடைகளை சோதித்துள்ளார். அப்போது, குழந்தையின் பிறப்புறுப்பில் விந்தணுக்கள் படிந்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து வெளியூரில் உள்ள கணவன் மற்றும் அருகில் வசிப்பவர்களுக்கு தெரியப்படுத்தினார். பின்னர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதை கண்டறிந்த மருத்துவர், உடனடியாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வடுவூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.