மக்கள் ஒத்துழைப்பால் பாதியாக குறைந்த கரோனா பாதிப்பு: மம்தா
மேற்கு வங்கத்தில் மக்கள் ஒத்துழைப்பு அளித்ததால் கரோனா பரவல் பாதியாக குறைந்துள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.


மேற்கு வங்கத்தில் மக்கள் ஒத்துழைப்பு அளித்ததால் கரோனா பரவல் பாதியாக குறைந்துள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவிய நிலையில் தற்போது மேற்கு வங்கத்தில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இதுகுறித்து முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில்,
பிற மாநிலங்களில் பொதுமுடக்கம் போடப்பட்ட நிலையில், மேற்கு வங்கத்தில் விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகளுக்கு மக்கள் ஒத்துழைத்ததால் கரோனா பரவல் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.
மாநில அரசால் இதுவரை 1.40 கோடி கரோனா தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டுள்ளது.
மேலும், மாநிலத்தில் உள்ள உணவகங்களின் ஊழியர்கள் தடுப்பூசி போட்ட பின், மாலை 5 மணிமுதல் 8 மணிவரை திறக்க அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...