ஜம்மு-காஷ்மீரில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 124 வயது மூதாட்டி
நாடு முழுவதும் பலர் தடுப்பூசி போட மறுத்து வரும் நிலையில், 124 வயது மூதாட்டி ஒருவர் தடுப்பூசி செலுத்திக் கொண்டது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.


நாடு முழுவதும் பலர் தடுப்பூசி போட மறுத்து வரும் நிலையில், 124 வயது மூதாட்டி ஒருவர் தடுப்பூசி செலுத்திக் கொண்டது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் வீடு வீடாக சென்று முதியவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஒரு வீட்டில் 124 வயதுடைய ரெஹ்தி பேகம் என்ற மூதாட்டி தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டிய நிலையில், அவருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, உலகத்திலேயே அதிக நாள் வாழ்ந்து வரும் மூதாட்டி என்ற உண்மை வெளிவந்துள்ளது.
கின்னஸ் புத்தகத்தின் படி, ஜப்பானிய பெண் கேன் தனகா என்பவர் தான் 118 வயதில் வாழும் மிகப் பழமையான நபர் ஆவார். இதுவரை வாழ்ந்த மிகப் பழமையான நபராக ஜீன் லூயிஸ் கால்மென்ட் என்பவர் உள்ளார். அவர் தனது 122 வயது மற்றும் 164 நாட்களில் உயிரிழந்தார்.
இந்நிலையில், அந்த மூதாட்டியின் வயதை உறுதிபடுத்தற்கான அதிகாரப்பூர்வ சான்றான வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை போன்ற எதுவும் இல்லை.
ரேஷன் அட்டையை அடிப்படையில் அவரது வயது 124ஆக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...