ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனம்: பாரத் பயோடெக் அதிகாரிகள் ஆய்வு

செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் தடுப்பூசி தயாரிப்பு மையத்தில் பாரத் பயோடெக் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

News image
Updated On :4 ஜூன் 2021, 7:59 am

DIN

செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் தடுப்பூசி தயாரிப்பு மையத்தில் பாரத் பயோடெக் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை மேலாண் இயக்குநர் சுஜித்ரா இலா தலைமையில் 5 பேர் ஆய்வு செய்து வருகிறார்கள்.

கடந்த வாரம் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தில்லிக்கு நேரில் சென்று செங்கல்பட்டு நிறுவனத்தில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்குவது குறித்து மத்திய அமைச்சர்களை சந்தித்து மனு கொடுத்தார்.

இந்நிலையில், கோவேக்‌ஷின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக்குடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தியதையடுத்து, செங்கல்பட்டில் பாரத் பயோடெக் நிறுவன அதிகாரிகள் இன்று ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.