பாறைக்குளம் வெள்ளியம்பலநாதர் கோவிலில் வைகாசி பிரதோச வழிபாடு
திருச்சுழி அருகே பாறைக்குளம் கிராமத்திலுள்ள அருள்மிகு வெள்ளியம்பலநாதர் திருக்கோவிலில் வைகாசிமாத சோமவார சிறப்புப் பிரதோஷ வழிபாடு திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.


விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பாறைக்குளம் கிராமத்திலுள்ள அருள்மிகு வெள்ளியம்பலநாதர் திருக்கோவிலில் வைகாசிமாத சோமவார சிறப்புப் பிரதோஷ வழிபாடு திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
அருள்மிகு வெள்ளியம்பலநாதர் கோவிலானது திருச்சுழி அருகே பாறைக்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது. இவ்வட்டாரப்பகுதியிலேயே மேற்குநோக்கி அமைந்ததும், ஒரே பாறையில் செதுக்கப்பட்ட குடைவரைக்கோவிலுமாகிய சிறப்பு கொண்டதாக இத்திருக்கோவில் உள்ளது. இதனிடையே, திங்கள்கிழமை மாலை நடைபெற்ற வைகாசி மாத சோமவார சிறப்புப் பிரதோச வழிபாட்டில் முதலில் அருள்மிகு நந்தீஸ்வரப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், தீப, தூப ஆராதனைகளும், அருகம்புல், மலர்மாலை, விபூதி, சந்தனம், குங்குமம் கொண்டு அலங்காரங்கள் நடைபெற்றன. பின்னர் அருள்மிகு வெள்ளியம்பலநாதருக்கு பன்னீர், பால், இளநீர், விபூதி, குங்குமம் மற்றும் தேன், வாழைப்பழம், பேரீச்சம் பழம் ஆகியன கலந்த கலவையாலும், வில்வ இலை, மஞ்சள்,கஸ்தூரி மஞ்சள் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், தீப, தூப ஆராதனைகளும் நடைபெற்றன. பின்னர் முழு அலங்காரத்தில் அருள்மிகு நமச்சிவாயரும், அருள்மிகு நந்தீஸ்வரரும் காட்சி தந்து அருள் பாலித்தனர். வழிபாட்டின்போது கோவில் ஊழியர்கள் மட்டுமே பங்கேற்றனர். பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவிலின் பூசாரியும் சிவனடியாருமான ராஜபாண்டி செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...