தெப்பக்காடு முகாமிலுள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கு கரோனா பரிசோதனை

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமிலுமுள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கு கரோனா தொற்று பரிசோதனை பணிகள் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது.
தெப்பக்காடு முகாமிலுள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கு கரோனா பரிசோதனை

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமிலுமுள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கு கரோனா தொற்று பரிசோதனை பணிகள் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது.

வண்டலூரில் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதியான நிலையில் தெப்பக்காடு மற்றும் டாப்சிலிப் யானைகள் முகாம்களிலுமுள்ள வளர்ப்பு யானைகளுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து தெப்பக்காடு முகாமில் உள்ள 27 யானைகள் மற்றும் வாழைத்தோட்டம் பகுதியில் மரக்கூண்டில் அடைக்கப்பட்டுள்ள ரிவால்டோ யானை மொத்தம் 28 யானைகளுக்கு சளி மாதிரிகள் சேகரிக்கும் பணிகள் தொடங்கின மற்றும் ஆசன வாய் பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள இசாத்நகர் அரசு கால்நடை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்க ப்படுகிறது. மேலும் இந்த யானைகளுடன் அவற்றின் பாகன்கள் 52 பேருக்கும் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com