ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

மாநிலங்களின் கையிருப்பில் 1.33 கோடி தடுப்பூசிகள்: மத்திய அரசு

மாநிலங்களின் கையிருப்பில் 1.33 கோடி கரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்துள்ளது.

News image

மாநிலங்களின் கையிருப்பில் 1.33 கோடி தடுப்பூசிகள்

Updated On :9 ஜூன் 2021, 9:35 am

மாநிலங்களின் கையிருப்பில் 1.33 கோடி கரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்தியில்,

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசின் சார்பில் இலவசமாக இதுவரை 25,06,41,440 கரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், 23,74,21,808 கரோனா தடுப்பூசிகள் இதுவரை உபயோகிக்கப்பட்டுள்ளது. கையிருப்பில் 1,33,68,727 தடுப்பூசிகள் உள்ளன. மேலும், மாநிலங்களுக்கு 3,81,750 தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ஜூன் 21 முதல் 18 வயதுடையோருக்கு செலுத்த அனைத்து மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசிகள் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.