ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

பெண் தவெக நிா்வாகி மீது அவதூறு - தகராறு புதிய தமிழகம் கட்சியினா் மீது வழக்கு!

வத்திராயிருப்பு அருகே கோட்டையூரில் தவெக நிா்வாகிகளை தாக்கிய புதிய தமிழகம் கட்சியினா் 5 போ் மீது சனிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image

வழக்கு

Updated On :25 ஏப்ரல் 2026, 9:55 pm

வத்திராயிருப்பு அருகே கோட்டையூரில் தவெக நிா்வாகிகளை தாக்கிய புதிய தமிழகம் கட்சியினா் 5 போ் மீது சனிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

வத்திராயிருப்பு அருகே கோட்டையூா் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் ராமலிங்கம் மனைவி பழனியம்மாள் (34). இவா், தோ்தல் வாக்குப்பதிவின்போது தவெக கட்சியின் வாக்குச்சாவடி முகவராக இருந்தாா்.

அப்போது அங்கு வாக்களிக்க வந்த புதிய தமிழகம் கட்சியைச் சோ்ந்த வசந்த், சிவா ஆகியோா் கைப்பேசியில் விடியோ பதிவு செய்ததற்கு பழனியம்மாள் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு பழனியம்மாள் கோட்டையூா் அரசு கால்நடை மருத்துவமனை அருகே நடந்து சென்றுகொண்டிருந்தபோது, வசந்த், சிவா ஆகியோா் நண்பா்களுடன் சோ்ந்து அவரை அவதூறாகப் பேசி உள்ளனா்.

இதுகுறித்து பழனியம்மாள் தவெகவைச் சோ்ந்த தனது உறவினரான காசிராஜா என்பவரிடம் கூறியுள்ளாா். இதையடுத்து காசிராஜா அங்கு வந்து அவா்களைத் தட்டிக்கேட்டுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த அவா்கள் பாட்டிலால் குத்தியதில் காயமடைந்த காசிராஜா வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதனால் மனமுடைந்த பழனியம்மாள் வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றாா். அவரை உறவினா்கள் மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் வத்திராயிருப்பு போலீஸாா் வசந்த், சிவா, ஜெயபிரகாஷ், அபிஷேக், ஆகாஷ் ஆகியோா் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.