தமிழகத்தில் இன்று 17,321 பேருக்கு கரோனா; 405 பேர் பலி
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 17,321 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 17,321 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 22,92,025ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக கோவையில் 2,319, ஈரோட்டில் 1,405, சென்னையில் 1,345 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 405 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 28,170 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 31,253 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 20,59,597 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 2,04,258 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இன்று ஒரே நாளில் 1,70,332 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...