நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவின் சாதனையை சஞ்சு சாம்சன் முறியடித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் மும்பை வான்கடே திடலில் நேற்று (மார்ச் 5) நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும். அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்த அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
ரோஹித் சர்மா சாதனை முறியடிப்பு
இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் 7 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம், டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவின் சாதனையை சஞ்சு சாம்சன் முறியடித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடர் ஒன்றில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா தன்வசம் வைத்திருந்தார். கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித் சர்மா 15 சிக்ஸர்கள் விளாசியிருந்தார்.
இந்த நிலையில், நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் சஞ்சு சாம்சன் 16 சிக்ஸர்கள் விளாசி ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடர் ஒன்றில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர்கள்
சஞ்சு சாம்சன் - 16 சிக்ஸர்கள் (2026)
ரோஹித் சர்மா - 15 சிக்ஸர்கள் (2024)
ஷிவம் துபே - 15 சிக்ஸர்கள் (2026)
இஷான் கிஷன் - 14 சிக்ஸர்கள் (2026)
ஹார்திக் பாண்டியா - 14 சிக்ஸர்கள் (2026)
யுவராஜ் சிங் - 12 சிக்ஸர்கள் (2007)
Summary
Sanju Samson has broken former Indian captain Rohit Sharma's record of hitting the most sixes in the ongoing World Cup.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இங்கிலாந்து அணிக்காக உலகக் கோப்பையில் அதிக கோல்கள்..! சாதனையை சமன்செய்த ஹாரி கேன்!

உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனையை சமன் செய்த மெஸ்ஸி!

டி20 உலகக் கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தி வங்கதேசம் வெற்றி!

மகளிர் டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பேட்டிங்!
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies





