புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தொழிற்கல்வி மாணவர் சேர்க்கை: ஆணையம் அமைத்து முதல்வர் உத்தரவு

தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களில் சேர்க்கை ஆராய ஒருநபர் ஆணையம் அமைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  உத்தரவிட்டுள்ளார்.

News image

முதல்வர் மு.க.ஸ்டாலின்

Updated On :15 ஜூன் 2021, 1:08 pm

DIN

தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களில் சேர்க்கை ஆராய ஒருநபர் ஆணையம் அமைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  உத்தரவிட்டுள்ளார்.

மாணவர்களின் சேர்க்கை அளவினை ஆராய்ந்து, ஒருமாத காலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் தமிழக அரசு ஆணையம் அமைத்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

2020-2021 ஆம் கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அதேபோன்று, பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்விப் படிப்புகளில் கடந்த ஆண்டுகளின் மாணவர் சேர்க்கை விவரங்களின்படி, அரசுக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் முன்னிலை வகிக்கும் சுயநிதிக் கல்லூரிகளில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர் என்று குறிப்பிட்டு, இந்நிலை மாற்றப்பட வேண்டுமென்று பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.

இக்கோரிக்கைகளைத் தீர ஆராய்ந்தும், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சமூகப் பொருளாதார நிலைகள் குறித்தும், அதனால் அவர்கள் சந்திக்கக்கூடிய இடர்பாடுகள் ஏதுமிருப்பின், அவற்றைக் கண்டறியவும், கடந்த ஆண்டுகளில் அம்மாணவர்களின் சேர்க்கை பல்வேறு தொழிற்கல்வி நிறுவனங்களில் எவ்வாறு உள்ளது என ஆய்வு செய்தும், மேலே கூறிய அக்காரணிகளால், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சேர்க்கை தொழிற்கல்விகளான பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற படிப்புகளில் குறைந்த அளவில் உள்ள நிலையே இருப்பின், இந்நிலையை சரிசெய்திட எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்ய, தில்லி உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி த. முருகேசன் அவர்கள் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்து, தமிழ்நாடு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (15-6-2021) உத்தரவிட்டுள்ளார். இந்த ஆணையம், தனது அறிக்கையினை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு அளிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.