நாட்டில் 9 நகரங்களில் செலுத்தப்படும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி

ரஷியாவின் கரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி, தற்போது இந்தியாவின் 9 நகரங்களில் பயன்பாட்டில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஸ்புட்னிக்-வி தடுப்பூசி
ஸ்புட்னிக்-வி தடுப்பூசி

ரஷியாவின் கரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி, தற்போது இந்தியாவின் 9 நகரங்களில் பயன்பாட்டில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கோவிஷீல்ட், கோவேக்ஸின் என இரண்டு இந்தியத் தயாரிப்பு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கும் நிலையில் மூன்றாவதாக ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்தியாவின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டது.

91.6 சதவீத செயல்திறனைக் கொண்ட ஸ்புட்னிக் வி, இந்தியாவில் மே 14ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வந்தது.

முதலில் ஹைதராபாத், விசாகப்பட்டினத்தில் மட்டும் போடப்பட்ட ஸ்புட்னிக்-வி தடுப்பூசி, தற்போது மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, சென்னை, தில்லி, பாடி, கோலாப்பூர் மற்றும் மிரியலகுடா உள்ளிட்ட 9 நகரங்களில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மட்டும் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஸ்புட்னிக் தடுப்பூசியின் விலை ரூ. 995.40 (5% ஜிஎஸ்டி உள்பட) என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக டாக்டர் ரெட்டி ஆய்வக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இந்நிறுவனமே ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிக்கும்போது விலை குறையும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com