ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

பஞ்சாப்: ஆம் ஆத்மியில் இணைந்தார் முன்னாள் காவல் அதிகாரி

பஞ்சாபின் முன்னாள் காவல் அதிகாரி குன்வர் விஜய் பிரதாப் ஆம் ஆத்மி கட்சியில் திங்கள்கிழமை இணைந்தார்.

News image
Updated On :21 ஜூன் 2021, 9:45 am

பஞ்சாபின் முன்னாள் காவல் அதிகாரி குன்வர் விஜய் பிரதாப் சிங் ஆம் ஆத்மி கட்சியில் திங்கள்கிழமை இணைந்தார்.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், ஆட்சியை கைப்பற்ற கட்சிகள் அனைத்தும் கூட்டணி உள்ளிட்ட வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அக்கட்சித் தலைவரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் இன்று பஞ்சாப் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த பயணத்தின் போது, கேஜரிவால் முன்னிலையில் பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் காவல் அதிகாரி குன்வர் விஜய் பிரதாப் ஆம் ஆத்மி கட்யியில் இணைந்தார்.

இந்த நிகழ்வில் பேசிய கேஜரிவால் கூறியதாவது,

குன்வர் விஜய் பிரதாப் அரசியல்வாதி அல்ல. ஆனால், தேசத்திற்காக சேவை செய்ய இன்று ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார். பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவரை நிறுத்துவோம். பஞ்சாப் முழுவதும் பெருமிதம் கொள்ளும் ஒருவராக அவர் இருப்பார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.