சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

முதல் நாளில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தலைவர்கள்

கரோனா தடுப்பூசி போடும் இரண்டாம் கட்டத்தின் முதல் நாளில் பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் திங்கள்கிழமை தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள்.

News image
முதல் நாளில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட தலைவர்கள்
Updated On :1 மார்ச் 2021, 1:58 pm

DIN

கரோனா தடுப்பூசி போடும் இரண்டாம் கட்டத்தின் முதல் நாளில் பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் திங்கள்கிழமை தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு ஜனவரி 16 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. பிப்ரவரி 26 வரை 1.40 கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இந்நிலையில், இன்று முதல் நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் 2ஆம் கட்டப் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர் இன்று தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள்:

1.தில்லியில் பிரதமர் மோடி
2.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
3.சென்னையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு 
4.பிகார் முதல்வர் நீதிஸ் குமார்
5.ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்
6.மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர்  
7.ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா
8.மத்திய அமைச்சர் ஜித்தேந்தர் சிங்
9.தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பாவர்

மேலும், நாளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.