சென்னையில் 800 துப்பாக்கிகள் ஒப்படைப்பு
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், சென்னையில் உரிமம் பெற்ற 800 துப்பாக்கிகள் காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், சென்னையில் உரிமம் பெற்ற 800 துப்பாக்கிகள் காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, உரிமம் பெற்ற துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைக்கும்படி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், சென்னையில் இதுவரை 800 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மீதமுள்ள 1,900 உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வாக்குப்பதிவு தேதிக்கு முன்பாக காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...