மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தொகுதி பங்கீடு: சிபிஐயுடன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது திமுக

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :4 மார்ச் 2021, 11:55 am

DIN

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் இந்த பேச்சுவார்த்தையில், சிபிஐக்கு ஒதுக்கும் தொகுதிகள் இறுதி செய்யப்படவுள்ளது.

தொகுதிப் பங்கீடு தொடர்பாக முதல்கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், இன்று மீண்டும் பேச்சு நடைபெற்று வருகிறது.

முதற்கட்டப் பேச்சுவாா்த்தையில் சிபிஐக்கு 6 தொகுதிகள் வரையே ஒதுக்க முடியும் என திமுக தரப்பில் கூறப்பட்டது. ஆனால், சிபிஐ இரட்டை இலக்கு எண்ணில் தொகுதிகள் கோரியிருந்தது.

இந்நிலையில் தொகுதிகளை இறுதி செய்வது தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் இன்று இரு கட்சிகளும் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.