காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு: மசோதாவுக்கு மாநிலங்களவை ஒப்புதல்

காப்பீட்டு துறையில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கும் மசோதாவுக்கு மாநிலங்களவை ஓப்புதல் அளித்துள்ளது.
நிர்மலா சீத்தாராமன்
நிர்மலா சீத்தாராமன்

காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கும் மசோதாவுக்கு மாநிலங்களவை ஓப்புதல் அளித்துள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி மாா்ச் 8 ஆம் தேதி தொடங்கியது.

இந்நிலையில், இன்று கூடிய மாநிலங்களவை கூட்டத்தில், காப்பீடு துறையில் அந்நிய முதலீடு உச்சவரம்பை 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக அதிகரிக்கும் மசோதாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஒப்புதல் பெற்றது.

மேலும், நாடாளுமன்ற சிறப்புக் குழுவிற்கு இந்த மசோதாவை அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com