எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மேற்கு வங்கத்தில் நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு: தயார் நிலையில் தேர்தல் ஆணையம்

மேற்குவங்க மாநிலத்தில் நாளை (மார்ச் 27) முதல்கட்ட வாக்குப்பதிவு  நடைபெறவுள்ளதையொட்டி, பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

News image
Updated On :26 மார்ச் 2021, 10:29 am

ANI

மேற்குவங்க மாநிலத்தில் நாளை (மார்ச் 27) முதல்கட்ட வாக்குப்பதிவு  நடைபெறவுள்ளதையொட்டி, பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவில் மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் 5 மாவட்டங்களிலுள்ள 30 தொகுதிகளுக்கு நாளை முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அம்மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

திரிணமூல் கட்சியினரால் பாஜகவை சேர்ந்த 130 தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், 732 கம்பெனி மத்திய ஆயுதப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக சிறப்பு காவல் பார்வையாளர் விவேக் துபே தெரிவித்துள்ளார்.  

மேலும், 30 தொகுதிகளிலும் 21 பெண் வேட்பாளர்கள் உள்பட 191 பேர் போட்டியிடுகின்றனர். கடந்த 2016 தேர்தலில், இந்த 30 தொகுதிகளில் 27ல் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. மொத்தம் 294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்கத்தில், முதல்கட்டமாக 27ஆம் தேதியும், இறுதி கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 29ஆம் தேதியும், வாக்கெண்ணிக்கை மே 2 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.