வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

தெலங்கானாவில் நாளைமுதல் பொதுமுடக்கம் அறிவிப்பு

தெலங்கானா மாநிலத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் மே 12 முதல் 10 நாள்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
தெலங்கானாவில் நாளை முதல் பொதுமுடக்கம்
Updated On :11 மே 2021, 10:11 am

DIN

தெலங்கானா மாநிலத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் மே 12 முதல் 10 நாள்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், தெலங்கானாவிலும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இதையடுத்து இன்று மாநில அமைச்சரவைக் கூட்டம் கூடியது. அந்த கூட்டத்தில், மே 12ஆம் தேதி முதல் 10 நாள்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்காக காலை 6 மணிமுதல் 10 மணிவரை மட்டுமே காய்கறி, மளிகை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.