

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,073 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று வியாழக்கிழமை (இன்று) கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 73 பேர் உயிரிழந்தனர்.
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 29,497 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து தமிழகம் திரும்பிய 9 பேர் உள்பட புதிதாக 35,579 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவை, செங்கல்பட்டு, மதுரை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
மாவட்ட வாரியாக விவரம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.