நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கேரள முதல்வராக மீண்டும் பதவியேற்றார் பினராயி

கேரள முதல்வராக பினராயி விஜயன் 2-ஆவது முறையாக இன்று பதவியேற்று கொண்டார். 

News image
Updated On :20 மே 2021, 10:06 am

DIN

திருவனந்தபுரம்: கேரள முதல்வராக பினராயி விஜயன் 2-ஆவது முறையாக இன்று பதவியேற்று கொண்டார். அவருடன் 3 பெண்கள் உள்பட 20  அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

கேரளத்தில் 140 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அபார வெற்றிபெற்றது.

இதையடுத்து அந்த மாநில முதல்வராக பினராயி விஜயனும், 20 அமைச்சர்களும் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

அமைச்சரவையில் 3 பெண்கள் இடம்பெறவுள்ளனா். முந்தைய இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசின் அமைச்சரவையில் இரு பெண்களும், ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசின் அமைச்சரவையில் ஒரு பெண்ணும் இடம்பெற்றிருந்தனா்.

தற்போது அமைச்சா்களாக பதவியேற்றுள்ள பெண்களில் ஒருவரான பிந்து கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்தவா். அவரே திருச்சூரின் முதல் பெண் மேயரும் ஆவாா்.

அவரைத் தவிர ஊடகவியலாளராக பணிபுரிந்த வீணா ஜாா்ஜ், முன்னாள் தடகள வீராங்கனை சின்சு ராணி ஆகியோரும் அமைச்சா்களாக பதவியேற்றுள்ளனா்.

சின்சு ராணி இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்தவா். இவா் கேரளத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அமைச்சராக பதவியேற்ற முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.