மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

கரோனா: தமிழகத்தில் மே மாதத்தில் 9.29 லட்சம் பேர் பாதிப்பு; 10,186 பேர் பலி

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 9,29,760 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 10,186 பேர் பலியாகியுள்ளனர்.

News image
Updated On :31 மே 2021, 2:49 pm

DIN

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 9,29,760 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 10,186 பேர் பலியாகியுள்ளனர்.

கரோனா இரண்டாம் அலையால் நாடு முழுவதும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை மே மாத தொடக்கம் முதலே இரண்டாம் அலையின் பரவல் அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில் கடந்தாண்டு முதல் இல்லாத அளவிற்கு ஒரு மாத உயிரிழப்பாக 10,186 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் 11,66,756 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மே மாத இறுதியில் பாதிப்பு எண்ணிக்கை 2096516 ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் கடந்த மாதம் 14,046 பேர் பலியான நிலையில், மே மாதத்தில் 10,186 பேர் பலியானதையடுத்து மொத்த பலியின் எண்ணிக்கை 24,232 அதிகரித்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை கடந்த ஒரு மாதத்தில் 1,15,128 பேரிலிருந்து 301781ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 47,68,401 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.