ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உசிலம்பட்டியில் களைகட்டியது 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர். 

News image
Updated On :19 பிப்ரவரி 2022, 4:54 am

DIN

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர். 

நீண்ட நாட்களுக்கு பிறகு உசிலம்பட்டி நகராட்சி  அரசு மேல்நிலைப்பள்ளி, டி எல் சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி, ஆர் சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, டி இ எல் சி நடுநிலைப்பள்ளி, கருக்கட்டான்பட்டி  அரசுப்பள்ளியில், பொதுமக்கள் காலை 7 மணி முதல் வாக்களித்து வருகின்றனர்.


இதேபோல் எழுமலை பேரூராட்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பொது மக்கள் வாக்களித்து வருகின்றனர்,  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று சனிக்கிழமை காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. 


இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர் . வேட்பாளர்கள் வாக்குப்பதிவு இயந்திரம் மாதிரியை கையில் வைத்துக்கொண்டு தங்களது சின்னம் இருக்கும் வரிசையை காண்பித்து அதில் வாக்களிக்கும்படி வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இதனால் உள்ளாட்சித் தேர்தல் திருவிழா கோலம் பூண்டுள்ளது .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.