வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்த இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.

News image
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது(கோப்புப்படம்)
Updated On :6 ஜனவரி 2022, 4:30 pm

DIN

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்த இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துவரும் சூழலில் தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பாக தமிழக அரசுத் துறை உயரதிகாரிகள், சுகாதாரத் துறை வல்லுநா்கள் உள்ளிட்டோருடன் முதல்வா் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. அதன்படி தமிழக அரசு அறிவித்த இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. 

இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.