ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் கரோனா: கடுமையாகும் கட்டுப்பாடுகள்

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவல் காரணமாக தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் கரோனா: கடுமையாகும் கட்டுப்பாடுகள்
ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் கரோனா: கடுமையாகும் கட்டுப்பாடுகள்

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவல் காரணமாக தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துவருகிறது. இதனைத் தடுக்கும் விதமாக பல்வேறு நாடுகளும் தொற்று தடுப்பு பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நாளுக்குநாள் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவல் காரணமாக மீண்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதன்படி நியூ செளத் வேல்ஸ் மாகாணத்தில் மதுபான விடுதிகள், இரவு நேர விடுதிகள் போன்றவற்றில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுகாதார மற்றும் மருத்துவப் பணியாளர்களை அதிகளவு கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தும் விதமாக பிப்ரவரி மாதம் வரை அவசரமல்லாத அறுவை சிகிச்சைகளை ஒத்தி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் 1738 பேர் தற்போது சிகிச்சையில் உள்ள நிலையில் அடுத்த மாதத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 

அதேசமயம் தற்போது விதிக்கப்படும் கட்டுப்பாடுகளால் தொற்று பரவலை ஓரளவே குறைக்கும் எனவும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதற்கான சாத்தியங்களே அதிகம் உள்ளதாகவும்  ஆஸ்திரேலிய மருத்துவக் கழக பெர்ரோடெட் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இதுவரை 76 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com