சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.105 உயர்வு

வர்த்தகப் பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் நிர்ணயித்து வருகின்றன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் (கியாஸ் சிலிண்டர்) விலையை மத்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் கியாஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிக்கின்றன.

19 கிலோ   எடையுள்ள வர்த்தகப் பயன்பாட்டுக்கான   சிலிண்டரின் விலை தில்லியில் ரூ.105 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.108 ஆகவும் அதிகரித்துள்ளது. 5 கிலோ எடையுள்ள வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலையும் ரூ.27 உயர்ந்துள்ளது.

புதிய கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com