குற்றவாளி என தீர்ப்பளித்தால் நீதிமன்றம் மீது வழக்கு தொடருங்கள்:  கிரிண் ரிஜிஜு

உங்களைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தால், நீதிமன்றத்தின் மீதும் வழக்கு தொடருங்கள் என்று கேஜரிவாலை விமர்சித்துள்ள மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரிண் ரிஜிஜு
குற்றவாளி என தீர்ப்பளித்தால் நீதிமன்றம் மீது வழக்கு தொடருங்கள்:  கிரிண் ரிஜிஜு

உங்களைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தால், நீதிமன்றத்தின் மீதும் வழக்கு தொடருங்கள் என்று கேஜரிவாலை விமர்சித்துள்ள மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரிண் ரிஜிஜு, சட்டம் அதன் கடமையைச் செய்ய விடுங்கள் என்று கூறியுள்ளார்.

தில்லியில் கடந்த 2021-22-ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட கலால் கொள்கையில் முறைகேடு அரங்கேறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. தில்லியில் சா்ச்சைக்குரிய கலால் கொள்கை வகுக்கப்பட்டபோது அந்தத் துறையின் அமைச்சராக இருந்த மனீஷ் சிசோடியா மீது இந்த விவகாரத்தில் சிபிஐயும், அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தன. பின்னா், அவா் கைது செய்யப்பட்டதால் அமைச்சா் பதவியையும், துணை முதல்வா் பதவியையும் ராஜிநாமா செய்தார். 

இந்நிலையில், கலால் கொள்கை முறைகேடு வழக்கின் விசாரணைக்காக தில்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை பகல் 11 மணிக்கு ஆஜராகுமாறு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. இதை முதல்வா் அலுவலகம் உறுதிப்படுத்தியதுடன், விசாரணைக்கு கேஜரிவால் ஆஜராவாா் என்றும் தெரிவித்தது.

இதனிடையே தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கேஜரிவால், சிபிஐயும் மற்றும் அமலாக்கத்துறையும் தவறான பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளது என்று குற்றம்சாட்டினார். 

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்க பதிவில், பொய் சாட்சிகள் மற்றும் தவறான ஆதாரங்களையும் நீதிமன்றங்களில் தாக்கல் செய்வது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என கூறியிருந்தார். 

இந்நிலையில், தில்லி முதல்வர் கேஜரிவாலின் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில், மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரிண் ரிஜிஜு ஞாயிற்றுக்கிழமை சில தகவல்களை பதிவிட்டுள்ளார். 

அதில், தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு ஒருபோதும் ஊழல் ஒரு பிரச்னையாக இருந்ததே இல்லை. ஊழலின் பெயரில் அதிகாரத்தை கைப்பற்ற, அன்னா ஹசாரேவை ஆம் ஆத்மி பயன்படுத்தியதாகவும், "இப்போது அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டார்கள், அன்னா ஹசாரே சொல்வதைக் கூட கேட்க மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அன்னா ஹசாரேவையும் மக்களையும் முட்டாளாக்க ஊழல் ஒரு சாக்காக இருந்தது என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், உங்களைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தால், நீதிமன்றத்தின் மீதும் வழக்குத் தொடருவேன் என்று கூற நீங்கள் மறந்துவிட்டீர்கள். சட்டம் அதன் கடமையைச் செய்வதற்கு விடுங்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com