
தமிழக சட்டப்பேரவையில் முத்திரைத் தாள் கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்டத்திருத்த மசோதா திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
புதிய சட்டத்திருத்த மசோதவின்படி, முத்திரைத்தாள்களின் கட்டணம் 10 மடங்கு வரை உயர்த்தப்படவுள்ளது. ரூ. 20 முத்திரைத்தாள் கட்டணம் ரூ. 200-ஆகவும், ரூ. 100 முத்திரைத்தாள் கட்டணம் ரூ. 1,000-ஆகவும் உயர்த்தப்பட்டு நடைமுறைக்கு வரவுள்ளது.
அதேபோல், நிறுவன ஆவணங்களுக்கான முத்திரைத்தாள் கட்டணமும் மாற்றி அமைக்கப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. நாகை மாலி ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பை பதிவு செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.