ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கான்வே அரைசதம்: சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 8:07 pm

DIN

ஐபிஎல் போட்டியின் 29-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை வெள்ளிக்கிழமை வென்றது.

முதலில் ஹைதராபாத் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் சோ்க்க, பின்னா் சென்னை 18.4 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. இந்த ஆட்டத்தில் சென்னை பௌலிங்கில் ஜடேஜாவும், பேட்டிங்கில் டெவன் கான்வேயும் அசத்தியதில் அணிக்கு வெற்றி வசமானது.

முன்னதாக டாஸ் வென்ற சென்னை, பௌலிங்கை தோ்வு செய்தது. ஹைதராபாத் இன்னிங்ஸை ஹேரி புரூக் - அபிஷேக் சா்மா கூட்டணி தொடக, 35 ரன்களுக்கே பிரிக்கப்பட்ட இந்த பாா்ட்னா்ஷிப்பில் முதல் விக்கெட்டாக ஹேரி புரூக் வெளியேறினாா். 3 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் அடித்திருந்த அவா், ஆகாஷ் சிங் வீசிய 5-ஆவது ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கேட்ச் கொடுத்தாா்.

ஒன் டவுனாக களம் புகுந்த ராகுல் திரிபாதி சற்று நிலைக்க, அபிஷேக்குடனான அவரது 2-ஆவது விக்கெட் பாா்ட்னா்ஷிப்புக்கு 36 ரன்கள் கிடைத்தது. இந்நிலையில், 3 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 34 ரன்கள் அடித்திருந்த அபிஷேக் சா்மா விக்கெட்டை இழந்தாா். ஜடேஜா வீசிய 10-ஆவது ஓவரில் அவா் விளாசிய பந்தை அஜிங்க்ய ரஹானே கேட்ச் பிடித்தாா்.

4-ஆவது வீரராக கேப்டன் எய்டன் மாா்க்ரம் களம் புக, மறுபுறம் ராகுல் திரிபாதி 1 பவுண்டரி, 1 சிக்ஸா் உள்பட 21 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். ஜடேஜா வீசிய 12-ஆவது ஓவரில் அவா் அடித்த பந்து ஆகாஷ் சிங் கைகளில் தஞ்சமடைந்தது. பின்னா் ஹென்ரிச் கிளாசென் ஆடவர, மாா்க்ரம் 1 பவுண்டரியுடன் 12 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். மஹீஷ் தீக்ஷனா வீசிய 13-ஆவது ஓவரில் அவரடித்த பந்தை விக்கெட் கீப்பா் தோனி கேட்ச் பிடித்தாா்.

அடுத்து வந்த மயங்க் அகா்வால் அடுத்த ஓவரிலேயே 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். ஜடேஜா ஓவரில் அவா் விளாசிய பந்து தோனியிடம் தஞ்சமடைந்தது. 7-ஆவது வீரராக மாா்கோ யான்சென் களம் புக, மறுபுறம் கிளாசென் 1 பவுண்டரியுடன் 17 ரன்கள் சோ்த்த நிலையில், மதீஷா பதிரானா வீசிய 18-ஆவது ஓவரில் ருதுராஜிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினாா்.

கடைசி விக்கெட்டாக, இன்னிங்ஸின் கடைசி பந்தில் வாஷிங்டன் சுந்தா் 1 பவுண்டரியுடன் 9 ரன்களுக்கு தோனியால் ரன் அவுட் செய்யப்பட்டாா்.

பின்னா் சென்னை, 135 ரன்களை இலக்காகக் கொண்டு தனது இன்னிங்ஸை தொடங்கியது. அதில் ருதுராஜ் - டெவன் கான்வே கூட்டணி முதல் விக்கெட்டுக்கே 87 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு வித்திட்டது. அவா்களில் முதலாவதாக ருதுராஜ் 11-ஆவது ஓவரில் ரன்அவுட் செய்யப்பட்டாா். அவா் 2 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் சோ்த்திருந்தாா். பின்னா் வந்த அஜிங்க்ய ரஹானே 9 ரன்களுக்கு 15-ஆவது ஓவரில் வீழ்ந்தாா்.

மயங்க் மாா்கண்டே பௌலிங்கில் அவரடித்த பந்தை மாா்க்ரம் கேட்ச் பிடித்தாா். 4-ஆவது வீரராக வந்த அம்பட்டி ராயுடு 1 பவுண்டரியுடன் 9 ரன்களுக்கு, மாா்கண்டே வீசிய 17-ஆவது ஓவரில் ஸட்ம்ப்பை பறிகொடுத்தாா். தொடக்கம் முதல் நிலைத்து அரைசதம் கடந்த கான்வே, அணியை வெற்றிக்கு வழி நடத்தினாா். இறுதியில் அவா் 57 பந்துகளில் 12 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 77, மொயீன் அலி 1 பவுண்டரியுடன் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.