மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சூடானில் 400க்கும் அதிகமானோர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு

சூடானில் ராணுவம், துணை ராணுவம் இடையேயான மோதலில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 2:26 pm

சூடானில் ராணுவம், துணை ராணுவம் இடையேயான மோதலில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

3500 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சூடானில் 20 சுகாதார நிலையங்கள் செயல்படுவதை நிறுத்திவிட்டன. மேலும், 12 சுகாதார நிலையங்கள் மூடப்படும் நிலையில் உள்ளன என உலக சுகாதார அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூடானில் சிக்கியிருக்கும் இந்தியர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என இந்தியாவின் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து ஐநாவுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.