சேலம்: கன்னங்குறிச்சி புது ஏரியில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பலி
சேலம் கன்னங்குறிச்சி புது ஏரியில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.


சேலம் கன்னங்குறிச்சி புது ஏரியில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.
கோடை விடுமுறை காலம் என்பதால் சிறுவர்கள் ஆங்காங்கே நீர்நிலைகளில் உள்ள பகுதிகளில் குளிப்பதற்காக செல்கின்றனர். அதன் அடிப்படையில் சேலம் கன்னங்குறிச்சி புது ஏரியில் ஏராளமான சிறுவர்கள் இன்று குளித்துக் கொண்டிருந்தனர். சுமார் 7 அடி ஆழத்திற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. அது மட்டும் இல்லாமல் ஏரி தூர்வார்பட்ட நிலையில் ஆங்காங்கே குழிகளும் காணப்பட்டிருந்தது. இந்த நிலையில் மூன்று சிறுவர்கள் கன்னங்குறிச்சி புது ஏரிக்கு குளிக்க வந்துள்ளனர். அதில் இரண்டு சிறுவர்கள் குளித்துக் கொண்டிருக்கும் போது சேற்றில் சிக்கி தத்தளித்துள்ளனர்.
அப்போது உடன் சென்ற தமிழ்மணி என்ற சிறுவன் சத்தம் போட்டு உள்ளான். இதனையடுத்து இதுகுறித்து கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். கன்னங்குறிச்சி காவல்துறை மற்றும் செவ்வாய்பேட்டை தீயனைப்பு துறையினர் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு இரண்டு சிறுவர்களின் உடலை மீட்டனர். அப்போது சிறுவர்களின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். விசாரணையில் கன்னங்குறிச்சி கோவிந்தசாமி காலனி பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பதும் தெரிய வந்தது.
இதில் பிரசாந்த் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார் என்பதும் பாலாஜி பதினோராம் வகுப்பு படித்து வருகிறார் என்பது தெரியவந்தது. தொடர்ந்து இருவரின் உடலையும் உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் ஜெயசீலன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏரியில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...