நியாய விலைக்கடைகளில் வாங்காத பொருள்களுக்கு ரசீது: கூட்டுறவு பதிவாளர் எச்சரிக்கை

நியாய விலைக்கடைகளில் வாங்காத பொருள்களுக்கு ரசீது போட்டதாக புகார் வந்தால் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை: நியாய விலைக்கடைகளில் வாங்காத பொருள்களுக்கு ரசீது போட்டதாக புகார் வந்தால் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

மத்திய, மாநில அரசுகள் வழங்கும் உணவு பொருள்கள் மானிய விலையில் நியாய விலைக்கடைகள் மூலம் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான குடும்ப அட்டைத்தாரர்கள் பயனடைந்து வருகின்றனர். 

இந்த நிலையில் சில நியாய விலைகளில் ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், பொருள்கள் வாங்காமலேயே வாங்கியதாக குடும்ப அட்டைத்தாரர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வருவதாக புகார் எழுந்தது. 

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் கூட்டுறவு சங்க பதிவாளர் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

அதில், நியாய விலைக்கடைகளில் வாங்காத பொருள்கள் வாங்காமலேயே வாங்கியதாக குடும்ப அட்டைத்தாரர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தால் அந்த நியாய விலைக்கடையின் ஊழியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு சங்க பதிவாளர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com