தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்: அதிமுக
தேவையான இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.


ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேவையான இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளின் நெல் மூட்டைகளை உடனே கொள்முதல் செய்ய வேண்டும் என அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக ஒன்றிய, நகர, பேரூா் செயலாளா்கள் ஆலோசனைக் கூட்டம் ராணிப்பேட்டைமாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் ஆா் ஜி கே நந்தகோபால் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் அதிமுக மாவட்டச் செயலரும், அரக்கோணம் எம்எல்ஏ வுமான சு. ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கிப் பேசினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...