மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஹரியாணா பாஜக எம்.பி. ரத்தன் லால் காலமானார்

ஹரியாணா மாநில அம்பாலா தொகுதி பாஜக எம்.பி. ரத்தன் லால் கட்டாரியா (72) உடல்நலக்குறைவாவ்  காலமானார்

News image
Updated On :18 மே 2023, 5:17 am

சண்டிகர் (ஹரியாணா): ஹரியாணா மாநில அம்பாலா தொகுதி பாஜக எம்.பி. ரத்தன் லால் கட்டாரியா (72) உடல்நலக்குறைவாவ்  காலமானார்

அம்பாலா தொகுதி எம்.பி.யும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான ரத்தன் லால் கட்டாரியா உடல் நலக்குறைவால் சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை மருத்துவமனையில் காலமானார் என்று அவரது மனைவி பான்டோ கட்டாரியா தெரிவித்துள்ளார். 

இன்று மதியம் 12 மணிக்கு சண்டிகரில் உள்ள மணிமஜ்ராவில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரத்தன் லால் கட்டாரியா மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

முன்னதாக, புதன்கிழமை மாலை, முன்னாள் திரிபுரா முதல்வரும், ஹரியாணா பொறுப்பாளருமான பிப்லப் குமார் தேப், ரத்தன் லால் கட்டாரியாவை மருத்துவமனையில் நேரில் சந்தித்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்து அவர் விரைவில் குணமடைய வாழ்த்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.