விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

அமெரிக்காவில் சாவியை விழுங்கியதால் இறந்த நெருப்புக் கோழி பற்றி...
உயிரிழந்த நெருப்புக் கோழி கரேன்
உயிரிழந்த நெருப்புக் கோழி கரேன்ஏ.பி.

ஷபிகா, கான்சாஸ்: அமெரிக்காவில் கான்சாஸ் மாகாணத்திலுள்ள ஷபிகா விலங்கியல் பூங்காவில் பணியாளர் ஒருவரின் சாவியை விழுங்கியதால்  நெருப்புக் கோழி உயிரிழந்தது.

கரேன் என்ற ஐந்து வயதான இந்த நெருப்புக் கோழி அதன் வசிப்பிட வேலியைத் தாண்டி வந்து, பணியாளரின் சாவியை விழுங்கிவிட்டது.

இந்த சாவியால் ஏற்படக் கூடிய பாதிப்பை அறுவைச் சிகிச்சை அல்லது வேறு வழியில் குறைத்துக் கோழியைக் காப்பாற்ற அமெரிக்கா முழுவதும் வல்லுநர்களிடம் ஆலோசனை கலக்கப்பட்டது. எனினும், கெடுவினையாக இந்த முயற்சியால் எவ்விதப் பலனும் ஏற்படவில்லை.

கடந்த வியாழக்கிழமை பணியாளரின் கரங்களிலேயே கரேன் உயிர்துறந்ததாக ஷபிகா பூங்காவின் இடைக்கால இயக்குநர் ஃபான் மோசர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த கரேன் வெறும் கோழி அல்ல, எங்கள் சமுதாயத்தின் போற்றத்தக்க உறுப்பினரும்கூட என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த கரேன் என்ற நெருப்புக் கோழி, 2023 ஏப்ரல் முதல் இந்தப் பூங்காவில் இருந்துவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com