அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

ஆளுநர் உரையில் மக்கள் நலத் திட்டங்கள் எதுவும் இல்லை: எடப்பாடி பழனிசாமி

ஆளுநர் உரையில் மக்கள் நலத் திட்டங்கள் எதுவும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

News image

எடப்பாடி பழனிசாமி.

Updated On :12 பிப்ரவரி 2024, 1:02 pm IST

இதுகுறித்து அவர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஆளுநர் உரை உப்பு சப்பில்லாத உரை, ஊசிப்போன உணவு பண்டம். எதிர்வரும் ஆண்டில் அரசு என்ன செய்ய உள்ளது என்பது குறித்து ஆளுநர் உரையில் இல்லை. தமிழ்நாடு அரசின் ஆளுநர் உரையில் எந்தவித அறிவிப்பும் முறையாக இல்லை. ஆளுநர் உரை வெறும் வார்த்தை ஜாலங்களாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரையில் குறிப்பிட்டது போல எந்த விதமான மக்கள் நல திட்டங்களையும் தமிழ்நாடு அரசு முழுமையாக செயல்படுத்தவில்லை என்றார்.

நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநா் ஆா்.என்.ரவியின் உரையுடன் இன்று (பிப்.12) காலை 10 மணியளவில் தொடங்கியது. எனினும், ஆளுநர் தனது உரையை முழுவதுமாக படிக்காமல் 2 நிமிடங்களில் முடித்தார். சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியதும் ஆரம்பத்தில் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அதிருப்தி தெரிவித்தார். “தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே பாடப்பட்டுள்ளது. அரசின் உரையில் உள்ள பல பகுதிகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது“ என்றும் ஆளுநர் குறிப்பிட்டார். வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரத் என்று தனது உரையை ஆளுநர் முடித்தார்.

இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு ஆளுநருக்கு தயாரித்த கொடுத்த கொள்கை உரையை, சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தமிழில் முழுவதுமாக வாசித்தார். இதையடுத்து, தமிழக ஆளுநர் வாசிக்காத உரையை சட்டப்பேரவைக் குறிப்பில் முழுவதுமாக பதிவிட அவை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை தொடர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவைல் கூட்டம் நிறைவடைவதற்கு முன்னதாகவே புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து, அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்த தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.