கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

”ராகுல் காந்தியை உங்களிடம் ஒப்படைக்கிறேன்” - சோனியா காந்தி உருக்கம்!

ரேபரேலியில் நடந்த பிரசாரத்தில் கலந்துகொண்ட சோனியா காந்தி, தனக்கு அளித்த அதே அன்பையும் பாசத்தையும் ராகுல் காந்திக்கும் வழங்குமாறு ரேபரேலி மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News image
Updated On :17 மே 2024, 12:56 pm

ரேபரேலியில் நடந்த பிரசாரத்தில் கலந்துகொண்ட சோனியா காந்தி, தனக்கு அளித்த அதே அன்பையும் பாசத்தையும் ராகுல் காந்திக்கும் வழங்குமாறு ரேபரேலி மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உத்தர பிரதேசத்தின் ரேபரேலியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தியும் கலந்துகொண்டு பிரசாரம் மேற்கொண்டனர்.

இந்த பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ”நான் என் மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன். நீங்கள் என்னை உங்களில் ஒருவராகக் கருதியது போல, அவருக்கும் அதே அன்பையும் பாசத்தையும் வழங்குங்கள். ராகுல் உங்களை ஏமாற்ற மாட்டார்" என்று கூறினார்.

ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார். சோனியா காந்தி, முன்பு இருபது ஆண்டுகளாக இந்த இடத்தை தக்க வைத்திருந்தார்.

”தனது வாழ்க்கையின் மிகப்பெரிய சொத்து என்னவென்றால், ரேபரேலி மக்கள் தனக்கு 20 ஆண்டுகள் எம்பி-யாக பணியாற்ற வாய்ப்பு அளித்தது” என்று சோனியா கூறினார்.

ரேபரேலி மக்களை தனது குடும்ப உறுப்பினர்கள் என்றும், இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நன்றியினையும் மரியாதையினையும் தெரிவிப்பதாக சோனியா கூறினார்.

ரேபரேலியும் அமேதியும் தனது குடும்பம் என்று கூறிய சோனியா காந்தி, அன்னை கங்கையைப் போலவே புனிதமான இந்த உறவு, ரேபரேலி விவசாயிகளின் இயக்கத்துடன் தொடங்கியது, அது இன்றும் தொடர்கிறது ".

"இந்திராகாந்திக்கும் ரேபரேலிக்கும் ஓர் சிறப்பான உறவு இருந்ததாகவும் ரேபரேலி மீது மிகுந்த பாசம் வைத்திருந்ததாகவும், இந்திரா ஜி மற்றும் ரேபரேலி மக்கள் தனக்கு வழங்கிய அதே போதனைகளை, ராகுலுக்கும் பிரியங்காவுக்கும் தான் கொடுத்துள்ளதாகவும் சோனியா கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.