
இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறித்து பேசிய விடியோ ஒன்றினை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ராகுல் காந்தி.
மக்களவைத் தேர்தலின் 5ஆம் கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன்(மே 18) முடிவடைந்துள்ளது. 5ஆம் கட்டத் தேர்தலில் பிகாரில் 5 தொகுதிகளுக்கும், ஜம்மு - காஷ்மீரில் 1 தொகுதிக்கும், ஜார்க்கண்டில் 3 தொகுதிகளுக்கும், லடாக்கில் 1 தொகுதிக்கும், மகாராஷ்டிரத்தில் 13 தொகுதிகளுக்கும், ஒடிஸாவில் 5 தொகுதிகளுக்கும், உத்தர பிரதேசத்தில் 14 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகளுக்கும் என மொத்தம் 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இளைஞர்களின் வேலைவாய்ப்ப்பு குறித்து பிரசாரம் ஒன்றில் பேசிய விடியோ ஒன்றினை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ராகுல் காந்தி.
அந்த விடியோவில், ’தான் விரும்புவதை பிரதமர் மோடியின் நாவினால் சொல்ல வைக்க இயலும்’ என்றும், ’வேலையின்மை குறித்து அவரை பேச வைக்கவேண்டும்’ என்றும் அதில் கூறியுள்ளார்.
மேலும், ”பிரதமர் ஓய்வு எடுத்துக்கொண்டால் மட்டுமே, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு சாத்தியம்” என்றும் கூறியுள்ளார் ராகுல் காந்தி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.