தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

”ஓபிசி மற்றும் எஸ்சி-க்கான இடஒதுக்கீட்டை யாராலும் கொள்ளையடிக்க முடியாது, இது பிரதமர் மோடி தரும் உத்தரவாதம்” என பிகாரில் தேர்தல் பிரசாரத்தில் அமித் ஷா உரை.

News image
Updated On :19 மே 2024, 12:47 pm

DIN

”இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினப் பிரிவைச் சார்ந்தோருக்கான இடஒதுக்கீட்டை யாராலும் கொள்ளையடிக்க முடியாது, இது பிரதமர் மோடி தரும் உத்தரவாதம்” என பிகாரில் தேர்தல் பிரசாரத்தில் அமித் ஷா கூறியுள்ளார்.

5ஆம் கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன்(மே 18) முடிவடைந்துள்ளது. 5ஆம் கட்டத் தேர்தலில் பிகாரில் 5 தொகுதிகளுக்கும், ஜம்மு காஷ்மீரில் 1 தொகுதிக்கும், ஜார்க்கண்டில் 3 தொகுதிகளுக்கும், லடாக்கில் 1 தொகுதிக்கும், மகாராஷ்டிரத்தில் 13 தொகுதிகளுக்கும், ஒடிஸாசாவில் 5 தொகுதிகளுக்கும், உத்தர பிரதேசத்தில் 14 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகளுக்கும் என மொத்தம் 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நாளை(மே 20) நடைபெறவுள்ளது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எக்ஸ் தளப்பக்கத்தில் இட ஒதுக்கீடு குறித்து, பிகாரில் பிரசாரத்தில் பேசிய விடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

”மக்களை முட்டாளாக்கி அரசியலில் வெற்றிபெற ’இந்தியா’ கூட்டணி விரும்புகிறது. பிரதமர் மோடி 400 இடங்களில் வெற்றி பெற்றால் இடஒதுக்கீட்டை ரத்து செய்வார் என்று அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் இது ஒரு பொய்.

பிரதமர் மோடிக்கு நாடாளுமன்றத்தில் முழுப் பெரும்பான்மை இருந்தும், அவர் ஒருபோதும் இடஒதுக்கீட்டில் கை வைக்கவில்லை" என்று அமித் ஷா பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.